கார்த்திக் அனிதா

Saturday, May 1, 2010

நட்பாக பழகும் இளம் ஜோடி காதலர்களாகும் கதை...

கோட்டா சீனிவாசராவும் ராஜன் பி.தேவும் நண்பர்கள், எதிர் எதிர் வீட்டில் வசிக்கிறார்கள். தோட்டாவின் மகன் ரத்தனும் ராஜன் பி.தேவின் மகள் மஞ்சுவும் சிறு வயது முதலே நட்பாக பழகுகிறார்கள். ஒரே கல்லூரியிலும் படிக்கின்றனர்.

ரத்தன்- மஞ்சு இடையே அடிக்கடி தகராறு. ஒருவரையொருவர் சிக்கலில் மாட்டி விட்டு சந்தோஷப்படுகின்றனர்.

பெண்களை ராக்கிங் செய்ததாக ரத்தன் மேல் ஆத்திரப்படும் கல்லூரி முதல்வர் தந்தையை அழைத்து வரச்சொல்கிறார் ரத்தன் போலி தந்தையை ஏற்பாடு செய்து முதல்வரை சந்திக்க வைக்கிறார். மஞ்சு இடையில் புகுந்து அவர் போலி என்று போட்டு உடைக்க ரத்தன் சஸ்பெண்டாகிறார். நட்பில் விரிசல் ஏற்படுகிறது. மஞ்சுவை பழி வாங்க துடிக்கிறார் ரத்தன்.

அப்போது மஞ்சுவுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. ரத்தனை பிரிய மனமின்றி காதல் வயப்படுகிறார் மஞ்சு. திருமண தேதி நெருங்க ரத்தனுக்கும் காதல் பிறக்கிறது. இருவரும் காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். பின்னர் எப்படி இணைந்தார்கள் என்பது கிளைமாக்ஸ்...

இளமைப்பொலிவோடு காதல் ரசம் சொட்ட கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர் ஸ்ரீஹரி... ரத்தன், மஞ்சுவின் சிறுசிறு முட்டல் மோதல்கள் ரசனையானவை... ரோட்டில் கோடு போட்டு பந்தயம் கட்டி ஒருத்தருக்கொருத்தர் தலையில் கொட்டி சேர்ந்து விழுவது ஆரவாரம். ரத்தனின் நண்பர்களை மாட்டி விட்டு மஞ்சு சண்டை போடுவது யதார்த்தம்.

திருமணம் நிச்சயமானதை ரத்தனிடம் மஞ்சு வருத்தமாய் சொல்ல சனியன் ஒழிந்தது என அவர் சந்தோசத்தில் குதிப்பது... எதிர்பாராதது...

தந்தை இறந்ததும் ஆதரவற்ற ரத்தனுக்கு உணவு தந்து அக்கறை காட்டும் மஞ்சுவின் அன்பு அழுத்தம்... மஞ்சு மேல் தனக்குள்ளும் காதல் ஒளிந்திருப்பதை உணரும் ரத்தன் அதை வெளிப்படுத்த இயலாமல் தவிக்கையில் மனதில் நிற்கிறார். பெங்களூரில் வேலைக்கு சென்ற பின் ரத்தனும் தன்னை காதலிப்பதை ரூபாய் நோட்டில் அவர் எழுதி வைத்திருப்பதில் இருந்து அறிந்து மஞ்சு அழுது துடிக்கும் போது எல்லோரையும் அழ வைக்கிறார். இருவரும் போட்டி போட்டு காதலை பிழிந்துள்ளனர்.

வில்லனாக பார்த்த கோட்டா சீனிவாசராவும், ராஜன் பி.தேவும், குணச்சித்திர வேடத்தில் பளிச்சிடுகின்றனர். அடடே மனோகர், சிங்கமுத்து காமெடி கலகலப்பு...

பழைய கதையை புதுசாக்கியுள்ளனர். முதல் பகுதியில் இருந்த வேகம் பிற்பகுதியில் குறைந்தாலும் காதல் நெஞ்சை நிரப்புகிறது. கிளைமாக்ஸை இன்னும் மெருகேற்றி இருக்கலாம். ஜாக் ஆனந்த் இசையில் பாடல்கள் கேட்கலாம்.

0 comments:

Post a Comment

கார்த்திக் 24 உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறது.

About This Blog

நம் தளம் பற்றிய கருத்துகள் மற்றும் உங்கள் கதைகள் நம் தலத்தில் ஒலிபரப்பு செய்ய: kaarthik2008.vaalu24@blogger.com என்ற முகவரியில் பதிவு செய்யுங்கள், நன்றி...

adsforindians

Guru

நண்பர்கள் தளம்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP