இந்த மென்பொருள் நமது உறங்கும் நேரத்தை சரியாக நினைவு படுத்தி நம்மை உறங்க செல் என கட்டளை இடுகிறது. இந்த மென்பொருளின் அமைப்புகளில் சென்று நீங்கள் உறங்க செல்லும் நேரத்தை தேர்ந்தெடுத்து கொள்ளவும். பின்பு எவ்வளவு நேரதிருக்கு ஒரு முறை உங்களக்கு நினைவுபடுத்த வேண்டும் என்பதையும், உங்கள் உறங்கும் நேரம் வந்தவுடன் கணிணியின் இயக்கத்தை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதையும் தேர்வு செய்து கொள்ளுங்கள். இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்குங்கள்.
தெய்வமுரசு தனித்தமிழ் நாட்காட்டியின் சிறப்புகள் ::
தமிழில் எண்களின் வரிவடிவம் உண்டா என்று அறியாத தமிழிளந் தலைமுறைக்கு அவற்றை வழக்கில் உள்ள அரபு எண்களுக்குப் பதிலாக அறிமுகப்படுத்தல்.
மதியால் பெயர் பெறற மாதங்களின் பெயரைத தூய தமிழால் வழங்குதல்.
அமாவாசை - பௌர்ணமி, ஏகாதசி, சுக்லபட்சம்-கிருஷ்ணபட்சம் எல்லாம் நமக்கு ஏன்? மறைமதி-நிறைமதி, பதிற்றொருமை, வளர்பிறை-தேய்பிறை என அவற்றின் தூய தமிழ் வடிவங்களை உலா வரச் செய்தல்.
பண்டிகைகள்,விழாக்களைத் தமிழ்ப் பெயர்களால் வழக்கில் உலவவிடல்.
முகூர்த்தம்-முழுத்தம் என தூய தமிழால் வழங்கப் பெறல்.
நாயன்மார்கள்,மற்றும் தமிழ்ச் சான்றோர்கள் சிறந்த நாட்களின் குறிப்புகள் தமிழில்.
மொத்தத்தில் எண்ணிலும், எழுத்திலும், எதிலும் தமிழ் மணம்!
Subscribe to:
Comments (Atom)

































