மூளை வளர்ச்சிக்கு தண்ணீர் அவசியம்

Monday, May 31, 2010

லண்டன்: தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உடல்  நலத்தைக் காப்பதுடன், மூளையின் வளர்ச்சிக்கு குடிநீர் அவசியம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.  லண்டனை சேர்ந்த கிங்ஸ் கல்லூரியின் ஆறிவியல் துறை நிபுணர்கள் குழு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்  குறித்து விரிவான ஆய்வு நடத்தியது. அதன் விவரம்: டீன் வயது இளைஞர்களின் மூளை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் மூளையின் வளர்ச்சிக்கும், சீரான இயக்கத்துக்கும்  குடிநீர் மிகவும் அவசியம் என்பது தெரியவந்துள்ளது.

போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் போனால் மூளை வள ர்ச்சி பாதிக்கப்படுவதுடன், சீரான இயக்கமும் தடைபடுவது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் 90 நிமிடங்களுக்கு  தொடர்ந்து வியர்வை வெளியேறினாலும் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.  தண்ணீர் தாகத்துடன் இருப்பவர்களால் வேலை மற்றும் படிப்பில் உரிய கவனம் செலுத்த முடியாமல் போகிறது. எனி னும், தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் குடித்தால் உடனடியாக மூளை இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என நிபு ணர்கள் தெரிவித்துள்ளனர்.

உடலின் எடைக்கு ஏற்ப தண்ணீர் தேவை மாறுபடுகிறது. மொத்த உடல் எடையில் 57 சதவீ தம் அதாவது 70 கிலோ எடை உள்ள ஒருவருக்கு 40 லிட்டர் தேவைப்படுகிறது. குடிநீர் பொதுவாக, உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதுதவிர, உடலில் கொழுப்பு சேர்வ தைத் தடுக்கவும், சீரான ஜீரணத்துக்கும், உறுப்புகளுக்கு மசகு பொருளாகவும், ஊட்டச் சத்துக்களை உடலின் பல  பாகங்களுக்கு எடுத்துச் செல்லவும், நோய்க் கிருமிகளை அழிக்கவும் தண்ணீர் பயன்படுகிறது என ஆய்வில் தெரியவந் துள்ளது.

Read more...

ஸ்ரீகாளஹஸ்தி கோவிலின் மேலும் 4 கோபுரங்களும் இடிந்து விழும் அபாயம்

ஸ்ரீகாளஹஸ்தி கோவிலின் மேலும் 4 கோபுரங்களும் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக தெரியவந்து உள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி நகரில் பிரசித்தி பெற்ற ஞானபிரசுனாம்பிகை உடனுறை ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவிலின் ராஜகோபுரம், கடந்த 26-ந் தேதி அடியோடு இடிந்து விழுந்தது.

காளஹஸ்தி கோவிலுக்கு 4 நுழைவு கோபுரங்கள் உள்ளன. தற்போது இந்த 4 கோபுரங்களும் இடிந்து விழும் நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இடிந்து விழுந்த ராஜகோபுரத்திற்கு 50 அடி தூரத்தில் பிட்சால ராஜகோபுரம் உள்ளது.

இந்த கோபுரத்தை 11-ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன் கட்டியதாக தல வரலாறு கூறுகிறது. இந்த கோபுரத்தைச் சுற்றி ஆலமரச் செடிகள் மற்றும் முள் செடிகள் சேர்ந்து புதர்களாக வளர்ந்துள்ளது. இதனால் கோபுரத்தின் அடித்தளத்தில் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது.

மேலும் காளஹஸ்தீஸ்வரர் மற்றும் ஞானபிரசுனாம்பிகா தாயார் கோவில் கருவறைகள் மீது கட்டப்பட்டுள்ள விமான கோபுரங்களும் சிதிலம் அடைந்துள்ளது. இந்த கோபுரங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்களில் இருந்து மண் உதிர்ந்து வருகிறது. இதனால் சிற்பங்களின் கண்கள், மூக்கு, வாய், கைகள் சிதிலமடைந்து கோரமாக காட்சி அளிக்கின்றன.

இதேபோன்று 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பால ஞானாம்பிகா கோபுரத்தில் இருந்தும் மண் உதிர்கிறது. இந்தக் கோபுரமும் முழுவதும் சேதமடைவதற்குள் மராமத்து பணிகள் மேற்கொண்டு எஞ்சிய கோபுரங்களையாவது காக்க வேண்டும் என்று காளஹஸ்தி நகர மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகாளஹஸ்தி ராஜ கோபுரம் கடந்த 26-ந் தேதி இடிந்து விழுந்தது. இதனால் காளஹஸ்தி நகரமே களை இழந்து காணப்படுவதாக அந்தப் பகுதி பொது மக்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.

இனி அந்த கோபுரத்தை தரிசிக்க முடியாது என்பதால், காளஹஸ்தி நகரின் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் இடிந்த கோபுரத்தின் கற்களையும் மண்ணையும் எடுத்துச் செல்கின்றனர். அவற்றை தங்கள் வீடுகளில் பூஜை அறையில் வைத்து கும்பிட இருப்பதாக பெண்கள் தெரிவித்தனர்.

இடிந்து விழுந்துவிட்ட கோபுரத்தை பார்வையிட்ட மாநில அறநிலையத்துறை ஆணையர் ஜே.வி.எஸ். பிரசாத் ஓராண்டுக்குள் மீண்டும் அதே போன்ற ராஜ கோபுரத்தை கட்டி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

கடந்த 25 ஆண்டுகளாகவே ஸ்ரீகாளஹஸ்தி கோவிலின் ராஜகோபுரம் சிதிலமடைந்து விரிசல் ஏற்பட்டு இருந்துள்ளது. அதனை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் உதாசீனப்படுத்தியதால்தான், இந்த நிலைமை ஏற்பட்டது. இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு, இது போன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவர் நடிகர் சிரஞ்சீவி தெரிவித்து உள்ளார்.

Read more...

6 கோடி நஷ்டஈடு தர விஜய் சம்மதம்..!

'சுறா' படம் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர் விஜய் ரூ 6 கோடியை நஷ்ட ஈடாக திரையரங்க உரிமையாளர்களுக்கு தர சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் 'சுறா' படம் தோல்வி அடைந்ததாகவும் அதற்கு இழப்பீடு வேண்டும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

'சுறா' படம் மூலம் திரையரங்க உரிமையாளர்களுக்கு ரூ.10 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும், எனவே இந்த படத்துக்கு முதலீடு செய்த தொகையில் ரூ.6 கோடியை திருப்பித் தர வேண்டும் என்றும் இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் 'ரோகிணி' பன்னீர் செல்வம், செயற்குழு உறுப்பினர் திருச்சி ஸ்ரீதர் ஆகியோர் தெரிவித்தனர். ஆனால் விஜய் தரப்பில் எல்லாமே வெற்றி படங்கள் என்று கூறி வருகிறார்கள்.

ஏற்கனவே ரஜினி, விஜய டி.ராஜேந்தர் ஆகியோர் படங்கள் தோல்வியடைந்த போது திரையரங்க உரிமையாளர்களுக்கு 35 சதவீதம் நஷ்ட ஈடு கொடுத்தார்கள். அது போல் விஜய்யும் நஷ்டஈடு தர வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் பிடிவாதமாக உள்ளனர்.

இழப்பீடு தராவிட்டால் இன்னும் 3 வாரங்களில் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம் என்றும் அறிவித்து உள்ளனர்.

விஜய் தற்போது 'காவல்காரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.அடுத்து 'வேலாயுதம்' என்ற படத்திலும், இந்தியில் வெற்றிகரமாக ஓடிய '3 இடியட்ஸ்' படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க உள்ளார்.

நஷ்ட ஈடு வழங்காவிட்டில் இப்படங்களுக்கு எதிரான முடிவை செயற்குழுவில் எடுப்போம் என்று திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் தரப்பிலும் விஜய் தரப்பிலும் சமரச பேச்சுவார்த்தைகள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடைபெற்று வருவதாகவும் செயற்குழு கூட்டத்துக்கு முன் சுமூகமான முடிவு ஏற்படும் என்று நம்புவதாகவும், தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

6 கோடிவரை நஷ்ட ஈடு தர விஜய் சம்மதித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more...

கார்த்திக் 24 உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறது.

About This Blog

நம் தளம் பற்றிய கருத்துகள் மற்றும் உங்கள் கதைகள் நம் தலத்தில் ஒலிபரப்பு செய்ய: kaarthik2008.vaalu24@blogger.com என்ற முகவரியில் பதிவு செய்யுங்கள், நன்றி...

adsforindians

Guru

நண்பர்கள் தளம்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP