அக்ஷய திரிதியையன்று நகை வாங்க வேண்டுமா?

Tuesday, May 11, 2010

இந்த வருடம் மே மாதம் எட்டாம் தேதி 'அக்ஷய திரிதியை'. 'அக்ஷய திரிதியை' என்றால் என்ன? நம்மில் பலருக்குத் தெரிந்ததெல்லாம் அக்ஷய திரிதியை அன்று கடைக்குப் போய் நகை வாங்குவதுதான். 'அக்ஷய திரிதியை' அன்று நகை வாங்கினால் நம் வீட்டில் செல்வம் பொங்கும் என்றொரு நம்பிக்கை. இது சரியானதா?

முதலில் 'அக்ஷய திரிதியை' என்றால் என்னவென்று பார்ப்போமே. 'அக்ஷய' என்றால் எடுக்க எடுக்கக் குறையாதது என்றொரு பொருளுண்டு. அக்ஷய பாத்திரம் தமிழிலக்கியங்களிலும் உண்டு. மணிமேகலைக்கு பசிப்பிணி போக்கும் 'அட்சய பாத்திரம்' கிடைத்தது. அன்று முதல் மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.

'திரிதியை' என்பது அமாவாசை அல்லது பௌர்ணமியிலிருந்து மூன்று நாள் கழித்து வரும் நாள். 'அக்ஷய திரிதியை' எனபது சித்திரை மாதம் அமாவாசை முடிந்த வளர்பிறையின் மூன்றாம் நாள்.

வளர்பிறைக்கே ஒரு சிறப்புண்டு. இருளாய் இருந்த வானத்தில் நிலா ஒவ்வொறு நாளும் வளர்ந்து முழு நிலவாய் மாறுவதே ஒரு அழகுதான்.

இதை வைத்துப் பார்க்கையில் அக்ஷய திரிதியை அன்று செய்யும் காரியங்கள் வளர்பிறை போல வளரும்; அட்சய பாத்திரம் போல குறைவின்றி இருக்கும் என்று பொருளாகிறது. ஆனால் இது தங்கம் வாங்கத் தோற்றுவிக்கப்பட்டதல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அக்ஷய திரிதியை ஏழை எளியோருக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டதே. அன்றைய தினம், பசித்தோர்க்கு உணவு படைத்தால் ஆயுள் அதிகரிக்கும். இயலாதோர்க்கு உடை கொடுத்தால் பதவி உயர்வு வரும் என்றெல்லாம் புராணங்களில் சொல்லியுருக்கிறது. தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது பின்னால் வந்த நம்பிக்கையாக இருக்கலாம்.

'அன்னையர் தினம்', 'மகளிர் தினம்', புதிதாய் 'காதலர் தினம்' என்றெல்லாம் வாழ்த்து அட்டையோடு கொண்டாடுகிறோம். அதுபோல 'அக்ஷய திரிதியை' தினத்தை நாம் 'நல்லுதவி தின'மாய் கொண்டாடலாம். இதற்கு 'மணிமேகலை தினம்' என்றும் பெயர் சூட்டலாம். இதுதான் நாம் நம் முன்னோருக்குச் செய்யும் நன்றியாகும்.

Read more...

கார்த்திக் 24 உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறது.

About This Blog

நம் தளம் பற்றிய கருத்துகள் மற்றும் உங்கள் கதைகள் நம் தலத்தில் ஒலிபரப்பு செய்ய: kaarthik2008.vaalu24@blogger.com என்ற முகவரியில் பதிவு செய்யுங்கள், நன்றி...

adsforindians

Guru

நண்பர்கள் தளம்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP