ஆனந்த தாண்டவம்

Saturday, May 1, 2010

முக்கோண காதல் கதை.

என்ஜினீயரிங் படித்த சித்தார்த்தந்தை வேலை பார்க்கும் கிராமத்துக்கு வருகிறார். அங்கு மின் வாரிய அதிகாரி மகள் தமன்னாவின் குசும்பத்தனங்கள் பிடித்து காதலாகிறார். இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்கின்றனர்.

திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அப்போது அமெரிக்க பணக்கார இளைஞன் பெண் கேட்டு வரதமன்னா குடும்பம் மனம்மாறுகிறது. திருமணத்தை நிறுத்துகின்றனர். தமன்னாவும் அமெரிக்க மாப்பிள்ளையை மணக்க விரும்புகிறார். நொருங்கும் சித்தார்த்தன் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்படுகிறார். புத்திமதி சொல்லி அமெரிக்காவுக்கு உயர் படிப்பு படிக்க அனுப்புகின்றனர். அங்கு ருக்மணி நட்பாகிறார். தமன்னாவும் கணவருடன் அமெரிக்கா வருகிறார்.

சித்தார்த் நடத்தைகள் ருக்மணிக்கு பிடிக்க காதல். தமன்னாவும் சித்தார்த்தை சந்திக்க பழைய நட்பு மலர்கிறது.

ஒரு கட்டத்தில் தமன்னா கணவன் பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ள விஷயம் தமன்னாவுக்கு தெரிய உடைகிறார் சித்தார்த்துக்கும் ருக்மணிக்கும் திருமண நிச்சய ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்கின்றனர். கணவனை உதறிவிட்டு சித்தார்த்தை கை பிடிக்க தமன்னா விரும்புகிறார். இருவரில் யாரை மணக்கிறார் என்பது கிளைமாக்ஸ்...

எழுத்தாளர் சுஜாதாவின் பழைய கதை திரைவடிவ மாகியுள்ளது. ஆழமான காதல், அமெரிக்க மோகம் இரண்டுக்கும் முடிச்சு போட்டு திரைக்கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர் காந்தி கிருஷ்ணா, மலை பிரதேச ஜில்லிப்பும் சித்தார்த் தமன்னா ஒருத்தரை யொருத்தர் மாட்டிவிடும் குறும்புகளும் அழகானவை. கடைசி நேரம் மாப்பிள்ளை மாறியதால் குடித்து வாந்தி எடுத்து புலம்பும் சித்தார்த் அழுத்தம் பதிக்கிறார். பழைய காதலி கணவன் அயோக்கியன் என தெரிந்து அவளை காப்பாற்ற துடிப்பது நிறைவு.

தமன்னா முழு நடிப்பை வெளிப்படுத்தி கதையை தன் வசமாக்கி கொள்கிறார். விளையாட்டுத்தனங்கள், போதை அடிமைத்தனம் வாழ்க்கை சிதைந்து வலி. என நிறைய பரிணாமங்களை அள்ளித்தெளிக்கிறார். முடிவு பரிதாபம்.

தமன்னாவின் முதல் பாதி லூசுத்தன நடவடிக்கைகள் காதலின் வலிமையை குறைப்பதோடு கிளைமாக்சில் அவர் மேல் அனுதாபம் வருவதற்கு பதில் வெறுப்பை சிந்தவைக்கிறது. தன்னை தூக்கி எறிந்து இன்னொருவனை மணந்தவள் பின்னால் சித்தார்த் அலைவதும் கேரக்டரை சிதைக்கிறத. ருக்மணி கவிதையாய் அழகூட்டுகிறார். ஜி.வி. பிரகாஷ் இசை ஏமாற்றம். வைரமுத்து பாடல் வரிகள் மனதில் நிற்கிறது. சங்கர் கேமரா மலையழகையும் அமெரிக்க பிரமாண்டத்தையும் அள்ளி இறைக்கிறது.

0 comments:

Post a Comment

கார்த்திக் 24 உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறது.

About This Blog

நம் தளம் பற்றிய கருத்துகள் மற்றும் உங்கள் கதைகள் நம் தலத்தில் ஒலிபரப்பு செய்ய: kaarthik2008.vaalu24@blogger.com என்ற முகவரியில் பதிவு செய்யுங்கள், நன்றி...

adsforindians

Guru

நண்பர்கள் தளம்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP