மனைவிகளை புரிந்து கொள்வது எப்படி ?

Sunday, April 18, 2010

எந்த பெண்ணும் தாயாய், மகளாய், சகோதரியாய் ஓரளவேனும் சக்ஸஸ் ஆகிறாள். ஆனால் நூற்றுக்கு 99.9 சதவீத பெண்கள் மனைவிகளாக தோற்றுப் போகிறார்கள்.

( 50 சதவீதம் பேர் நாத்தனார்/மாமியார்/மருமக்களாயும் தோற்றுப்போகிறார்கள்.இது குறித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்)

மகளிர் மனைவியராய் தோற்றுப்போக ஆயிரம் காரணங்கள் உள்ளன. சிலவற்றை இப்போது பார்ப்போம். சேடிஸ்டு கணவன் மார்களிடம் (கணவர்களுக்கு ஏது மார்) மாட்டிக் கொண்டுவிட்டவர்கள் கதைக்கு நான் போகவில்லை. சராசரி மனைவிகள் விஷயம் தான் இங்கு சப்ஜெக்ட்.

பெண்கள் மனைவியராய் தோற்றுப்போக கடந்த தலைமுறை பெண்களே காரணம். ஆமாங்க. இப்ப மருமகளா என்ட்ரி கொடுத்த பெண்ணையே எடுத்துக்கங்க(உதாரணமாண்ணே..) இவளை வளர்த்த பெண் அதான் அம்மாக்காரி இவளை வளர்க்கறப்பவே

"த பாரும்மா! நீ பேசிக்கலா மனுச ஜென்மம். ஆணானாலும்,பெண்ணானாலும் முதல்ல நீ மனுச ஜென்மம்.

ஒரு மனுச ஜன்மமா ஒரு ஆண் பிள்ளைக்கு என்னென்ன உரிமைகள் இருக்கோ எல்லா உரிமைகளும் உனக்குமிருக்கு. எந்த நிலையிலும் உன் உரிமையை விட்டுக்கொடுக்க தேவையில்லை.

ஒரு நாள் நீ வாசல் தெளிச்சா மறு நாள் உன் தம்பி தெளிக்கட்டும். ஒரு நாள் அப்பா,ஒரு நாள் நான். குடும்பங்கறது ஒரு அமைப்பு. இதுல நாமெல்லாரும் சம உரிமையுள்ள உறுப்பினர்கள். கடமையை செய்யற கடமை இருக்கிறாப்ல உரிமைக்காக போராடற உரிமையும் இருக்கு.

இயற்கை உனக்கு ஒரு சில இன் கன்வினியென்ஸை கொடுத்திருக்கலாம். ஆனால் அதுக்கும் குடும்பத்துல,சமூகத்துல உன் பொசிஷனுக்கும் எந்த தொடர்புமில்லே.

ஹார்டி பாடி,விண்டி மைண்ட், ஹோலி சோல் இது எல்லா மனுச ஜன்மத்துக்கும் அவசியத்துலயும் அவசியம்.இதுல ஆண் பெண் வித்யாசமே கிடையாது.

இந்த குடும்பமும்,சமூகமும் உனக்கு சில (உப்புக்கு உதவாத) சலுகைகளை கொடுத்து உன் உரிமையையே பறிச்சுரும். நீ அதுக்கு இடம் கொடுக்காதே. லாஸ் ஆஃப் ப்ளட் இருக்கும். அதை ஈடு செய்ய நல்லா சாப்பிடு. கர்ப காலத்துல சில மாசம் சரியா சாப்பிட முடியத போயிரும், குழந்தைக்கு நீ உன் உடல்ல இருந்து,சக்திய,ஊட்டத்தை தரவேண்டி வரும். இதையெல்லாம் மனசுல வச்சு நல்லா சாப்பிடு, சத்துள்ளதை சாப்பிடு. இதான் வித்யாசம். மத்தபடி ஒரு ம...ரும் இல்லைனு சொல்லி வளர்த்திருக்கனும்.

அப்படி வளர்த்திருந்தா இந்த மருமகள் ( மாட்டுப்பெண்ணில்லிங்கோ மாற்றுப்பெண் அதாவது நம்ம வீட்டு பெண் கல்யாணம் கட்டி வெளிய போயிருச்சு அதுக்கு மாற்றா எக்சேஞ்ச் ஆஃபர்ல வந்த பொண்ணு ) இப்படி எல்லாம் நாற வேண்டி வராது. என்ன செய்ய வளர்த்துட்டாங்க.

அஞ்சில வளையாதது ஐம்பதுல வளையுமா? ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.

பெண் மனைவியா தோத்துப்போனா நீ கணவனா,அப்பனா,குடும்ப தலைவனா கூட தோத்துப்போயிருவ. So.. பெண்ணை மனைவியா ஜெயிக்க வைக்க வேண்டியது ஏதோ சேவைனு ,அறிவு ஜீவித்தனம்னு நினைச்சுக்காதே.

முதல்ல பொம்மனாட்டிய புரிஞ்சிக்க. அவள் உன் காம வெறியை தீர்க்க விலைக்கு வாங்கின ஸ்பென்சர் பொம்மை கிடையாது. அவளும் ஒரு மனுச ஜன்மம்.அவளுக்கும் தன்மானம்,லட்சியம், சுயகவுரவம்,சில கனவுகள் எல்லாம் இருக்கும். எங்கயோ பிறந்தா, எங்கயோ வளர்ந்தா உன் ஜீன் வேற, நீ வளர்ந்த என்விரான்மென்ட் வேற, இப்படி அனேக அம்சங்கள் வேற வேறயா இருக்கு. நீ ஒரு ஃப்ரேமை அடிச்சு அந்த ஃப்ரேமுக்குள்ள முடங்கிகிடனு சொன்னா ஆரம்பத்துல சில நாள் நல்லாவே ஓடும்.

ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ள "உங்க வீட்ல மதுரையா ,சிதம்பரமானு கேட்டா " பந்தாவா அந்த பருப்பெல்லாம் வேகாது கண்ணா நம்ம வீட்ல நான் போட்டதுதான் சட்டம்னு சொல்லிக்கலாம்.

அவள் வீக்கர் செக்ஸ், ஃபிசிக்கலா தான் வீக்கு, சைக்கலாஜிக்கலா செமை ஸ்ட் ராங்கு. அவளை நீ அடிமைப்படுத்திட்டன்னு வை . அடிமை என்ன பண்ணுவான் ? புரட்சி பண்ண சமயம் பார்த்துக்கிட்டிருப்பான். நீ உன் லெவல்ல உன்னால சமாளிக்க முடியாத பிரச்சினைல மாட்டினப்போ தன் விடுதலைக்கு ட்ரை பண்ண ஆரம்பிச்சுருவான்.

நீ எஃப்.டி. போட்ட ஃபைனான்ஸ் கம்பெனிக்காரன் ஓடிப்போனப்பவோ, ஆஃபீஸ்ல மெமோ வாங்கி சஸ்பெண்ட் ஆனப்பவோ வச்சுருவா ஆப்பு. டேக் கேர்.

மனிதர்களில் இரண்டு வகைனு ஒரு பதிவை படிச்சிருப்பிங்க. பொதுவா பெண் சந்திர குணங்கள் கொண்டவ. (விதி விலக்குகள் இருக்கலாம்) . அவள் ஒரு ஆறு . நீ ஒரு கரை . அவள் பெருக்கெடுத்து ஓடறப்ப நெகிழ்ந்து கொடுத்தா, ஒன்னு ரெண்டு சேனல் திறந்துவச்சா ஓகே.இல்லேன்னா கரையே காணாம போயிரும்.

அவளை உனக்கு டூப்ளிகேட்டாவும் மாத்தலாம். அல்லது அவள் ஒரிஜினலா இருக்க சைடு கொடுத்து அவ கிட்டே இருக்கிற சில பிரத்யேக திறமைகளை உன்+உன் குடும்ப வளர்ச்சிக்கு உபயோகிச்சுக்கவும் முடியும். உனக்கு எது நல்லதுனு நீயே முடிவு பண்ணு.

பெண் இயற்கையின் பிரதி. இயற்கையின் நிதி, இயற்கையின் பிரதி நிதி. இயற்கைய அப்சர்வ் பண்ணி, ரசிக்க கத்துக்கிட்டா அதன் போக்கை புரிஞ்சிக்கிட்டு அதன் போக்குல போய் உபயோகிச்சுக்க கத்துக்கிட்டா மாசத்துக்கு மூணுமழை கியாரண்டி.

நாஸ்திதான்.

சில நேரங்கள்ள நீ ஒரு தந்தையா இருக்க வேண்டி வரும். (அவளுக்குள்ளே இருக்கிற கடைக்குட்டி பொண்ணு வெளிப்படறப்போ)

சில நேரங்கள்ள நீ ஒரு மகனா இருக்க வேண்டி வரும். (அவளுக்குள்ளே இருக்கிற தாய் வெளிப்படறப்போ)

நீ சைக்காலஜிப்படி பார்த்தாலும், ஜோதிஷத்தின் படி பார்த்தாலும் ஒவ்வொரு நாலு நிமிசத்துக்கும் மனுஷ மனம் மாறுது, ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தரம் முழுசா மாறுது.

உன் மனசும் மாறுது,அவள் மனசும் மாறுது. மாறாதது மாற்றம் ஒன்னுதான். நீ மாற்றத்தை ரெகக்னைஸ் பண்ணிட்டா உன் வாழ்க்கையே ஒரு ஸ்வர்கம். அதை ஏத்துக்கலன்னா அதான் நரகம்.

சரி மனைவிமாரோட செயல்கள்ள எரிச்சலூட்டற சில சமாசாரங்களையும் அதுக்குண்டான பின்னணி காரணங்களையும் பார்ப்போம் . புரிஞ்சிக்கிட்டு மேக்கப் பண்ணிக்கிட்டு வாழ்க்கைய ஓட்டப்பாருங்க தலை !

1.மனைவியரின் மனதில் செக்ஸ் என்பது அவர்கள் கணவனுக்கு தரும் சுகம், தாங்கள் செய்யும் தியாகம் என்று நினைப்பது.

(ஒரு வகையில் இது உண்மைதான். 23 தடவை அசைக்கப்பட்டால் அன்றி பெண்ணுக்கு ஆர்காஸம் ஏற்படாது. நம்மவர்கள் 7 அசைவுகளுக்கே நாக் அவுட்.)

2.வேறு எவனிடமும் படுத்துக் கொள்ளாததே பெரிய தகுதி என்று நினைப்பது.

( அவிங்க காய் கறிகாரன் கிட்டே அரை நிமிசம் அதிகம் பேசிட்டா உங்களால தாங்கிக்க முடியுமா?)

3.தன்னை,தன் தந்தை,சகோதரர்களை மட்டுமே மையமாக கொண்டிருத்தல்.

அவிக வீக்கர் செக்ஸு. இன் செக்யூரிட்டி பிராப்ளம். இதுக்கு நீங்களும் ஒரு காரணம். ஹும்.. கல்யாணத்துக்கு முன்னாடி நான் அம்பானி கூட மூணு சீட்டு விளையாடிக்கிட்டிருந்தேன். கணக்கா பீலா விட விட அவிக இன்செக்யூரிட்டி அதிகமாகுது. பொம்பள மனசு கொடி மாதிரி. வம்ச விருட்சத்தை சுத்திக்கிடறாங்க.

லைஃப் ஈஸ் ரிலேஷன் ஷிப். நீங்க உங்க நண்பர்கள் கிட்டே ரிலேஷன்ஷிப் மெயின்டெய்ன் பண்ணலை. அது மாதிரிதான் இதுவும். அட நீங்க ஒரு பிசியான பிசினெஸ் மேக்னட்டு. அவிக உங்க பி.ஆர்.ஓனு நினைச்சிக்கிருங்க. அவிக சொந்தம் உங்களுக்கும் சொந்தம்தானே .கொஞ்சமா பப்ளிக் ரிலேஷனை அவிகளும் மெயிண்டெயின் பண்ணட்டுமே. சனம் லாட்டரி டிக்கெட் மாதிரி .ஒத்த ரூபா இன்வெஸ்ட் பண்ணி வச்சா என்ன போச்சு.

4.வீக்கர் செக்ஸ் என்பதால் தாழ்வு மனப்பான்மைக்கும், அபத்திர உபாதைகளுக்கும் உள்ளாகி (இன் செக்யூரிட்டி ஃபீலிங்க்)கவைக்குதவாத தங்க நகைகள்,வங்கி டிப்பாஸிட்டுகள் மீது கவனம் வைப்பது. இது விஷயமாக நச்சரித்து கொண்டே இருப்பது.

(கிடக்கட்டுமே. என்ன போச்சு. ஒரு அசந்தர்ப்பம் வரும்போது உங்களுக்கும் உதவுமில்லியா. அவிக இன்செக்யூரிட்டிக்கு நீங்களும் காரணம்தான். ரோட்ல போறச்ச

பசு மாடு போனா அதையும், மனைவியையும் மாறிமாறி பார்க்கிறது நீங்கதானே.அவிக இப்படி கோமாதா கணக்கா மாற நீங்களும் ஒரு காரணம்தானே)

5.ஃபோர்வீலர்கள்,கலர் டிவி, பிளாஸ்டிக் குப்பை இன்னபிறவற்றின் மூலம் தம்மை சமூகத்தில் ஸ்தாபித்துக் கொள்ள முயல்வது.

( ஒரு ரகசியம் சொல்லவா தலை ! இதெல்லாம் கடந்த பதிவுல சொன்னேனே தன் ஏரியாவ எக்ஸ்டெண்ட் பண்ணிக்க நாய் மூத்திரமடிக்குது, அரசியல் வாதி பேனர் வைக்கிறான்னு அந்த கதைதான் இதுவும்.உயிர்களோட அடிப்படை உந்துதல் இனப்பெருக்கம்/விரிவாக்கம் என்ற இரண்டுதான். அவிக உயிர்ப்பா இருக்காங்கங்கறதுக்கு இதெல்லாம் ஒரு அடையாளம். உங்களால முடிஞ்சா விரிவாக்கத்துக்கு இது ஒன்னே வழியில்லை. நம்ம காலனில நாலு தாய்குலத்தை மோட்டிவேட் பண்ணி மரம் நடு, ரீடிங் ஹால் வை, லைப்ரரி வை, ஸ்தூலமா பார்த்தா தான் நீ செய்யறதும் நான் சொல்றதும் வேற வேற சூட்சுமத்துல ரெண்டோட நோக்கமும் ஒன்னுதான். உன் வழி ரஜினி காந்த் மாதிரி தனி வழி . மண்டைய பிச்சிக்க வைக்கும் . நான் சொல்ற வழி சமூக வழி. வாழ்க்கைய சுமுகமாக்கும்னு எடுத்து சொல்லுங்க)

6.ஒன்றோ ,இரண்டோ பெற்றதுமே கணவனை டேமேஜ் பார்ட்டியாக நினைத்து தம் வாரிசுகளுடன் நெருக்கம் வளர்ப்பது. கணவனை அலட்சியப்படுத்துவது.

(இதுக்கும் நீங்க தான் காரணம். நெஞ்சை தொட்டு சொல்லுங்க. இளமை வேகத்துல அவிகள வெறும் உடம்பாவே பார்த்திக்கிட்டிருந்திங்க. இந்த கான்செப்ட் அவிக சப் கான்ஷியஸ்லயும் என்ட் ரி கொடுத்துருச்சு.

பலான நேரத்துல கூட இடுப்புல டயர், பழனி விபூதி பைனு நக்கலடிச்சதுண்டா இல்லையா. இதெல்லாம்தான் அவிகளை பிள்ளைகளை நோக்கி டைவர்ட் பண்ணுது. இது ஒரு கோணம். இன்னொரு கோணத்துல பார்த்தா இதெல்லாம் உங்க கற்பனையா கூட இருக்கலாம். உயிர்களிடையிலான நெருக்கத்தை வளர்த்து இணைப்பது ஸ்பரிசம். அந்த ஸ்பரிசம் உங்களுக்கிடையில குறைஞ்சி போச்சு. கணக்கு போட்டு பாருங்க பலான நோக்கத்தோடான ஸ்பரிசத்தை விட்டுட்டு எத்தனை தடவை அணைச்சிங்க,முத்தமிட்டிங்க, தலைக்கு எண்ணெய் தேச்சி விடச்சொன்னிங்க ( அதான் ஷாம்பூ வாஷ் வந்துருச்சில்ல),முதுகு தேய்க்க சொன்னிங்க ( ப்ரஷ் வந்துருச்சுல்ல) .

இந்த வயசுல உங்களுக்கு செய்யனுங்கற துடிப்பு இருந்தும் செய்ய முடியாத வேலைகளை உங்க பிள்ளைகளுக்கு செஞ்சு உங்களுக்கே செஞ்சதா சைக்கலாஜிக்கலா, சப் கான்ஷியஸ்ல திருப்தி பட்டுக்கறாங்கனும் சொல்லலாமில்லியா.

7.கணவன் வாங்கி வந்த 54 இன்ஞ்ச் கலர் டி.வி வாங்க பணம் எப்படி வந்தது என்று யோசிக்க மறுப்பது.

( என்னிக்காவது நீங்க அவிகளை ரோசிக்க விட்டிங்களா, அதுலயும் இந்த மாதிரி விசயத்துல ரோசிக்கவே அனுமதிக்கலை. அவிகளுக்கு மூளைனு ஒன்னிருக்கிறதாவே நீங்க ஒத்துக்கிடலியே. ஒரு வேளை ரோசிச்சு எதுனா ரெகமெண்ட் பண்ணா ச்சும்மா விட் ருவிங்களா)

8..விரிந்த உலகத்தில் சிற்றெறும்பான கணவனுக்கு அதீத முக்கியத்துவத்தை தந்து அவனுள் அகங்காரத்தை யூரியா போட்டு வளர்ப்பது. விசிட்டர்களிடம் அவர் தூங்குகிறார்,சாப்பிடுகிறார் என்று காப்பாற்றுவது(?) அவனுக்கு வரும் செல் அழைப்புகளை அட்டெண்ட் செய்வது.

(இதையெல்லாம் நீங்க ரசிக்கிறிங்க , என் கரேஜ் பண்றிங்க. நாய்க்கு பிஸ்கட் போட்ட மாதிரி உங்க ஈகோவை சேட்டிஸ்ஃபை பண்ணி கவுக்க வழி பண்ணதே நீங்க தானே)

9.என்னடா கிம்பளப் பணத்தில் இப்படி வேட்டு விடுகிறானே நாளை ஏ.சி.பி யில் மாட்டினால் நம் நிலை என்ன என்று யோசிக்க மறுப்பது. நீங்கதான் எல்லாத்தயும் சென்டர் லிஸ்ட்ல வச்சி அவிகளை மானில அரசு மாதிரி ஆக்கிட்டிங்களே. மானில சுயாட்சி கேட்டா கூட பிரிவினை வாதிகளை இரும்புகரம் கொண்டு அடக்குவோம்னு மத்திய அரசு அறிவிக்கிற மாதிரில்ல இருக்கு உங்க பிஹேவியர்.

என்னைக் கேட்டால் நாட்டில் நில‌வும் ல‌ஞ்ச‌ லாவ‌ண்ய‌ங்க‌ளுக்கு கார‌ண‌மே க‌ண‌வ‌ன் மாரின் செக்ஸ் குறைபாடுக‌ள் தான் என்று சொல்வேன்.

மனித உடலின் அடிப்படை பசி உடற்பசி. அது ஒன்று தான் மனிதனில் உள்ள மிருகத்தை சற்று நேரமாவது வெளியே உலவவிட்டு,இதப்படுத்தி, பதப் படுத்துகிறது. உடற்பசி தீராத பட்சம் மன மிருகம் ரத்த காவு கேட்கிறது.

இவள் கலர் டி.வி கேட்பாள் அவன் ரத்தத்தை வியர்வையாக்கி சிந்தி கொண்டுவரவேண்டும். ஆம் செக்ஸில் திருப்திய‌டையாத‌ ம‌னைவி ஹும் நீ அதுக்குத்தான் லாய‌க்கில்லே இதை‌யாவ‌து வாங்கித் தாயேன் என்று கேட்பாள் போலும். ஹும் நாம் அதுக்குத் தான் லாய‌க்கில்லே இதையாவ‌து வாங்கித் த‌ருவோம் என்று க‌ண‌வ‌ன் வாங்கித் த‌ருவான் போலும்

ப‌திவு எங்க‌யோ ஆர‌ம்பிச்சு எங்க‌யோ போயிருச்சு. மறுபடி உடைச்சி திருப்பறேன்.

0 comments:

Post a Comment

கார்த்திக் 24 உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறது.

About This Blog

நம் தளம் பற்றிய கருத்துகள் மற்றும் உங்கள் கதைகள் நம் தலத்தில் ஒலிபரப்பு செய்ய: kaarthik2008.vaalu24@blogger.com என்ற முகவரியில் பதிவு செய்யுங்கள், நன்றி...

adsforindians

Guru

நண்பர்கள் தளம்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP